Jan 13, 2008

சில்லுகளுடன் ஒரு ஒளி விளையாட்டு


(1) அகாடியா-மைனேவுக்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு பயணம் சென்ற பொழுது எடுத்த படம்.
நேரம்-தமிழில் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம், நடுநிசியைத்தாண்டி..




(2) இதுவும் அதே இடத்தில் விடியற்காலை எடுத்த படம். அப்போதும் தமிழில்தான் சிந்திப்பதைப்பற்றி சிந்தித்திக் கொண்டிருந்தோம்.


(3)கார்னிங்- கண்ணாடி மாளிகையில் எடுத்த படம். கண்ணாடியிலேயே ஒரு அலங்காரம்..


(4) கார்னிங்- கண்ணாடி மாளிகை.

நிர்மூலம் உடையின் நிர்வாண

மென்றால்

நிர்வாணமும் ஒரு வகையில்

நீர்மூலமே.


(5) என் வீட்டில் ஒளி கொடுக்கும் இன்னொரு சில்லு. சுச்சியப் போட்டா வெளிச்சம்வரும் சில்லு.

(6)என் வீட்டு குளியறையில் இருக்கும் காலி குடுவை.
குளியறையிலே இருந்தாலும்
வெளிச்சத்தில் மட்டுமே
நிதமும் குளிக்கிறது..
காலியாய் இருப்பதால்
தினமும் நிரப்புகிறேன்
நீராவியால்...

9 விதை(கள்):

கப்பி | Kappi said...

எல்லாத்தையும் விட கடைசி ரெண்டு டாப்பு!!!

ILA (a) இளா said...

கடைசி ரெண்டு படங்கள்தான் எங்க வீட்டுல இருக்க படம். அதனால அந்த 2 ப்டங்களும் PIT போட்டிக்கு..

இலவசக்கொத்தனார் said...

கடைசி ரெண்டையே போடுங்க.

G.Ragavan said...

நல்லாயிருக்குங்க படங்க. கடைசி மூனுமே அருமை.

ஆனா ஒன்னு....எக்கச்சக்கமா தமிழ்ல சிந்திச்சிருக்கீங்கன்னு....

துளசி கோபால் said...

படங்கள் அட்டகாசம். கவிதையோ அதைவிட......

ஆமாம். வரப்பை உடைச்சுக்கிட்டு பாயுதே:-))))

கைப்புள்ள said...

கடைசி ரெண்டு படமும் நல்லாருக்கு...ஆனா ஏனோ தெரியலை எனக்கு முதல் படம் ரொம்ப பிடிச்சிருக்கு. தமிழ்ல திங்கிங்கும் சூப்பருங்ணா
:)

Boston Bala said...

முதல் படமும் கடைசிப் படமும் ரொம்ப விருப்பமாயிருக்கிறது

ILA (a) இளா said...

நன்றி- கப்பி, கொத்ஸ்,டீச்சர்,கைப்ஸ்,பாபா

MPGUYS said...

வணக்கம் இலா
ஆமாங்க ஈரோடு மூலப்பாளையம் தானுங்க.
உங்கள் நடப்பை போல் தான் எங்களுதும்
எல்லாரும் ஊரை விட்டு வெளியே சென்று விட்டனர்
அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியே இந்த வலைப்பூ
தங்கள் வருகைக்கு நன்றி.
கார்த்திக்