காலதேவனை வேண்டியபடி
தேன்கூடு "மரணம்" போட்டிக்காகவும்
சிறாராக,
பள்ளி முடிந்து திரும்புகையில்
யார் முதலில்
நம் தெருமுனை தொடுவது
என்றொரு போட்டி,
கன மழை,
இருவரின் கையிலும் குடை,
ஆனாலும் நனைந்த படி
முதலில் தெருமுனை தொட்டேன்.
கண்ணீருடன் நீ
உன் வீடு சென்றாய்,
அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்.
தோற்ற என்னை
சில நேரங்களில்
எள்ளி நகையாண்டாலும்,
என்றுமே
ஜெயிக்க விட்டதில்லை
மழை நீரில்
நீ விட்ட கண்ணீர்.
நீ
பெரிய மனுஷியாகிவிட்ட
போது வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்து
நம் திருமணத்தன்று இரவு
யாருக்கும் தெரியாமல்
உன் அறையில்
நான் நுழைந்து முத்தமிட்டு,
முன் வைத்த
பந்தயத்தில் ஜெயித்தேன்,
உனக்கும் பிடிக்கும் என்பதால்!
திருமண நாள் அதிகாலை,
எல்லோரும் முழிக்கும் முன்
யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும்
சமையல் அறையில்
முத்தத்துடன் காபி பருகியது
யாருக்கு தெரியும்?
அந்த காபியின்
கடைசி சொட்டு ருசி
இன்றுவரை
எங்கேயும் கிடைக்கவில்லை!
தாலி கட்டிய போது
ஏன் அழுதாய்
என்று கேட்டதற்கு
உதடு சுழித்து தெரியாதென்றாய்,
எனக்கு
பதில் கிடைக்காவிடினும்
நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது
முதலிரவு அன்று
நமக்குள் ஓடிய
குதிரைகள் அடங்கிய பின்
நீ கொடுத்த முத்தம் சொன்னது
காதலையா காமத்தையா?
வியர்வை துடைத்து விட்ட போது
காதில் கேட்டாய்
"இன்னுமொருமுறை இந்த
வியர்வை வேண்டுமா
இல்லை நான் வேண்டுமா?"
எதை எடுப்பது, எதை விடுப்பது?
நமக்குள் கூடல்கள் அதிகம்,
ஊடல்களை விட!
மழலையின் புன்னகை பார்த்து
நாம் மறந்த ஊடல்கள்
அதை விட அதிகம்.
மகளை பள்ளிக்கு
அனுப்பிய அந்த
முதல் நாளில்,
சிரித்தபடி டாட்டா சொன்னது
என் செல்ல மகள்,
கண்ணீருடன் நீ,
எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?
மகளுக்கு
முதலில் தாவணி அணிய
சொல்லித் தருகையில்,
நீ வெட்கப்பட்டதை பார்த்து
மகள் திட்டியதும்,
அதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது
நான் சிரித்ததையும்
நம் முற்றத்து விநாயகரைத்
தவிர வேறு யாருக்குத் தெரியும்?
செல்ல மகள் திருமணம்,
கண்ணீருடன் நான்,
விசும்பலுடன் நீ,
இவ்வளவு நாள் மகள்
அணைத்து உறங்கிய
டெடி கரடி
அனைத்தும் அன்றுதான்
தனிமையாய்!
பேரனுடன் கொஞ்சிய நாட்களில்
நாம் கண்ட பேரின்பம்
நாம் வணங்கிய
தெய்வங்கள் தந்ததில்ல!
என்னை விட்டு
நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!
இன்று
தனியறையில் நான்,
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?
என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை.
உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!
77 விதை(கள்):
//அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்.//
வெற்றிக்காக தோல்வி....
எல்லா வரிகளும் நன்றாக இருந்தாலும், இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.
//பேரனுடன் கொஞ்சிய நாட்களில்
நாம் கண்ட பேரின்பம்
நாம் வணங்கிய
தெய்வங்கள் தந்ததில்ல!//
ஏன்னென்றால் என் சகோதரியின் குழந்தை கொஞ்சும் என் பெற்றோர்களிடம் இதை கண்டதால்...
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
இளா!
அருமை! அவ்வளவுதான் சொல்லத்தோணுது!
மிச்சதையெல்லாம் ஒவ்வொரு வரியா திரும்பப் படிச்சு அனுபவிக்கப் போறேன்!
அடிக்கடி வரப்போரம் வாங்க!!!
வஷிட்டரே வாழ்த்தியது என் பாக்கியம் நன்றிங்க இளவஞ்சி.
நான் உணராத அனுபவம் அது, உண்மை என்று அறிந்ததும் அதை விட ஆனந்தம் , நன்றிங்க சிவா
இளா,
அருமையான கவிதை. இப்போதைக்கு வேறொன்றும் சொல்லத் தோணவில்லை. இன்னும் ஒரு நாலஞ்சு முறை அசைபோட்டு நிறைவா ரசிக்கனும்.
வெற்றி பெற என் வாழ்த்துகள்.
//உனக்கு வந்த
மரணத்தால்
இந்த நினைவுகளை
அழிக்கமுடியவில்லை,
உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி
கண்ணீரையும்
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!
//
சுகமான சுமைகள்தான் இளா!
மனதை ரொம்ப பாடாய்படுத்திய கவிதை! வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!
அருமைங்கறத தவிர சொல்ல வார்த்தை இல்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்
இளா !
எதைச் சொல்ல ? எதை விட? மிக அழகான ஒரு வாழ்க்கை நதியின் பாதையில் பயணப்பட்டதைபோல் இருக்கிறது ! ஒவ்வொரு வரிகளும் நிகழ்வுகளை உணரச்செய்கின்றன ! மிக அழகு ! :)
//வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!
//
சொல்லவே தோனலைன்னா ஏன்யா பின்னூட்டம் போடுறீங்க? வேற வார்த்தைகளே கிடைக்கலியா?
(என் மனசாட்சியுடனான என் உரையாடல் கீழே)
நான் சொன்னது: அதை இங்னே சொல்லாம போயிட்டா, நாங்க படிச்சிருக்கோம்னு அட்டெண்டன்ஸ் எப்படி போடுவது?
மனசாட்சியே! சொல்றதுக்கு ஒண்ணும் இல்லைன்னா சரக்கு இல்லைன்னு அர்த்தம் இல்லை. ரொம்ப ஃபீல் பண்ணிட்டோம். நிறைய சொல்லத் தோணுது..ஆனா வார்த்தைதான்...வரமாட்டேங்குதுன்னு அர்த்தம்.
மனசாட்சி: ஓ! அப்ப சர்தாம்பா.
//உதடு சுழித்து தெரியாதென்றாய்,
எனக்கு
பதில் கிடைக்காவிடினும்
நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது//
:)
கொஞ்சம் அடிக்கடி எழுதுங்க இளா..
கைப்புள்ளை-//இப்போதைக்கு வேறொன்றும் சொல்லத் தோணவில்லை//
சிபி-//வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!//
அனுசுயா-//அருமைங்கறத தவிர சொல்ல வார்த்தை இல்லை.//
நவீன் - //எதைச் சொல்ல //
அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி
பார்த்திபன் - //நிறைய சொல்லத் தோணுது..ஆனா வார்த்தைதான்...வரமாட்டேங்குதுன்னு அர்த்தம்//
நன்றி - அனைவரின் வராத வார்த்தைகளுக்கும் விளக்கம் சொன்ன பர்த்திபனுக்கு
ராசா- //கொஞ்சம் அடிக்கடி எழுதுங்க இளா//
எழுத தூண்டுதலாக உங்களை மாதிரி இருக்கும் போது, கொஞ்சம் என்ன நிறையவே எழுத முற்படுகிறேன் ராசா
இளா,
கவிதை நடையில் வாழ்க்கையை நன்றாக வரைந்திருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்
Simply superb இளா :)
வாழ்த்துக்களுடன்,
அருள்.
பார்த்திபனின் மனசாட்சியின் முணகல்.
"ம்க்கும். பார்த்திபனை விளக்கம் சொல்ல வெச்சது நானு. நன்றி பார்த்திபனுக்கு, என்ன கொடுமைங்க சார் இது?"
நான் கவிதைகளை அதிகம் ரசிப்பதில்லை. என்றாலும், ஒரு சில கவிதைகள் என்னுள் என்னவோ செய்வதுண்டு. இந்தக் கவிதையும் அந்த வரிசையில்.
வெற்றிபெற வாழ்த்துகள் இளா.
விளக்கம் தந்த பார்த்திபனுக்கும், தர வைத்த மனசாட்சிக்கும் நன்றிங்கோ000000000000000000.
வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி அருள்குமார்.
கவிதையை ரசித்ததுக்கு நன்றி ராஜா(KVR)
வாழ்த்துக்கு நன்றி கோவி.கண்ணன்
நல்லதொரு ரொமான்டிக் சினிமா மாதிரி ஆரம்பித்து உருக்கமாக முடித்துவிட்டீர்கள். சிம்ப்ளி சூப்பர்ப்.
முடிக்கும் பொழுது வார்த்தைகளில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது... தப்பா நினைச்சுக்காதீங்க... ரொம்ப அற்புதமா ஆரம்பிச்சு கடைசியில நல்லா முடிச்சுருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்ன்னு தோணுச்சு அதான் சொன்னேன்...
ஆனாலும் ரொம்ப நல்லா இருந்தது.. போட்டிக்கு வாழ்த்துக்கள்...
நண்பா... முதலில் இதழில் புன்னகையை பூக்க விட்டு கைப்பிடித்து வாழ்க்கையென்னும் பூந்தோட்டத்தின் வழி நடக்கச் செய்து... இறுதியில் மண்ணில் உதிர்ந்தப் பூவின் அருகினில் வந்து நிறுத்தி வாழ்க்கையை முடிவை மனத்தில் சுமக்க வைத்து விட்டது உன் கவிதை...
வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
அண்ணன் இளவஞ்சியின் வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன்.. அடிக்கடி வரப்போரம் வாங்க இளா.
வாழ்த்துக்கு நன்றி நண்பா, போட்டியில் எனது கவிதையை வைத்த போது நான் வீட்டில் பட்ட காயங்கள் அதிகம். அவற்றையெல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் தான் ஆற்றியிருக்கிறது. கண்டிப்பாக வரப்பு எனக்கு ஒரு நல்ல மாற்று.
குமரன் எண்ணம்-->//ரொம்ப நல்லா இருந்தது.. போட்டிக்கு வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு நன்றி குமரன். ஒரு முற்றுபுள்ளி மட்டுமே நம் வாழ்க்கையை முடிவு செய்துவிட கூடாது. நாம் அனுபவித்து, ரசித்த வாழ்வின் 50 வருடம் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வெறுமையாய் ஆகிவிட்டால், நாம் வாழ்ந்த முற்பகுதி வீண் என்று அர்த்தமாகிவிடாதா? வாழ்வில் சுகம், துக்கம் இரண்டும் உண்டு. மனிதனின் பிற்பகுதியில் அவன் கண்ட சுகங்கள் நிலைக்க சுகத்தை அசை போட்டால், வெறுமையும் இல்லை தற்கொலையும் இல்லை.
நான் சொல்ல வந்த கருத்து இதுதான் "முற்பகுதி சுகத்தினை அசை போடு, பிற்பகுதியும் சுகமாக இருக்கும்
அன்புள்ள இளா,
என்ன புதையல் கிடைக்குமோ என்று வந்து படித்துப் பார்த்தேன் ஒரு கவிதையை வாழ்க்கையாக வடித்து விட்டீர்கள். நாயகனும் நாயகியும் மனதுள் புகுந்து நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டார்கள். இனிமேல் தம்பதிகளுக்குள் அன்பு என்று பார்க்கும் போது உங்கள் ஆதர்ச நாயக நாயகிகள்தான் மனதில் வரப் போகிறார்கள்.
கவிதை என்றாலே கொஞ்சம் எட்ட நின்று விடும் என்னைக் கூட ஒரு கதைக் கவிதையால் கட்டிப் போட்டு விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். பொருத்தமாக இணைத்திருந்த அழகு கொஞ்சும் புகைப்படங்களுக்கு கூடுதல் நன்றிகள்.
அன்புடன்,
மா சிவகுமார்
மா சிவகுமார் --> ஆவலுடன் எதிர்பார்த்த பின்னூட்டம் உங்களுடையது. மா.சிவாவின் விமர்சனம் சுப்புடு விமர்சனம் மாதிரின்னு நேத்து என் தம்பிகிட்ட சொன்னேன். உங்களுடைய இந்த விமர்சனம் ஒரு நல்ல தூண்டுகோளாக அமைந்து விட்டது. வாழ்த்துக்கு பல கோடி நன்றிகள்.
சமவெளிப் பாதையில் சீரான பயணம் செய்த உணர்வு....
அருமையான ஆக்கம் இளா..
முடிக்கும் போது மரணம் என்ற வார்த்தை வராமல் வேறு சொல் பயன் படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து
மற்ற படி வரிகள் அனைத்தும் போட்டோ உள்பட அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள்
"என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை
மரணம் சர்வரோக நிவரணி என்று நம்பியிருக்கும் எனக்கு இப்போதுதான் புரிந்தது மரணத்தால் அழிக்கமுடியாததுவும் உண்டு என்று. இது கவிதை அல்ல காதலன் கட்டிய கவிதை தாஜ்மஹால்.
மரணத்தலைப்பில் அதிக சோகம் பிழியாமல்....
நல்லா இருந்தது இளா.
சாரி இளா, இவ்வளவு நாள் இதைப் பார்க்காம விட்டுட்டேன்னு ஒரே பீலிங்க்ஸ் ஆய்டுச்சு..
சூப்ப்ப்பரா எழுதி இருக்கீங்க.. பரிசு பெற வாழ்த்துக்கள்..
//என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை//
என்னோட கதையை ஒரே லைன்ல எழுதி முடிச்சிட்டீங்க!!!
இளா!
சில கவிதைகள் ஒரு முறை மட்டுமே ரசிக்க முடியும். ஆனால் இந்த கவிதை, வாழ்க்கையின் வேவ்வேறு கோணத்தில் காதலை சொல்லியிருக்கு. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி மின்னலு.
TRC-->//மரணம் சர்வரோக நிவரணி என்று நம்பியிருக்கும் எனக்கு இப்போதுதான் புரிந்தது மரணத்தால் அழிக்கமுடியாததுவும் உண்டு//
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.
// இது கவிதை அல்ல காதலன் கட்டிய கவிதை தாஜ்மஹால்.//
தாஜ் மஹால் கட்ட முடியாவிட்டாலும், நம்மால கட்ட முடிஞ்சது இந்த வரப்பு தானுங்க.
//பரிசு பெற வாழ்த்துக்கள்.. //
வாழ்த்துக்கு நன்றிங்க பொண்ஸ்.
//என்னோட கதையை ஒரே லைன்ல எழுதி முடிச்சிட்டீங்க!!! //
அட, அப்படியா.
ஸ்ரீதர்-->//சில கவிதைகள் ஒரு முறை மட்டுமே ரசிக்க முடியும். ஆனால் இந்த கவிதை, வாழ்க்கையின் வேவ்வேறு கோணத்தில் காதலை சொல்லியிருக்கு. வாழ்த்துக்கள். //
வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க ஸ்ரீதர்.
இளா,
அருமை.
//என்னை விட்டு
நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!
இன்று
தனியறையில் நான்,
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?
என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை.
உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!//
சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, இவ் வாக்கியங்கள் என்னை அறியாமலே கண்ணீர் விட வைத்துவிட்டன.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வெற்றி-->//இவ் வாக்கியங்கள் என்னை அறியாமலே கண்ணீர் விட வைத்துவிட்டன. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் //
வாழ்த்துக்களுக்கு நன்றி வெற்றி. "கண்ணீர் விட வைக்குமளவுக்கு" என்னையும் எழுத வைத்த ஆண்டவனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்
அன்பின் இளா,
சொல்லி முடித்த வேகம் நன்று.
"வெல்ல" வாழ்த்துக்கள்!
அன்புடன்
நயனி
வாழ்த்துக்கு நன்றி நயனி
//சுகமான சுமைகள்தான் இளா!
மனதை ரொம்ப பாடாய்படுத்திய கவிதை//
உங்க கவிதைவிடவா சிபி. போட்டின்னு வந்தாச்சுன்னா மக்களுக்கு சபை அடக்கம் எங்கிருந்துதான் வருதோ தெரியல. நக்கல், நையாண்டிக்கு விடுமுறை குடுத்துட்டீங்களா?
நல்ல கவிதை, படங்கள் தேர்வும் அழகு.
நன்றிங்க ராஜா. இந்த படங்களை நான் புடிக்க பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். கவிதை எழுதினத விட படங்களை தேர்ந்து எடுக்க ஆன நேரம் அதிகம்.
வார்த்தைகளே வரவில்லை. இவ்வளவு போட்டிக்கிடையிலும் ஒரு நல்ல தரமான கவிதைய தந்து இருக்கீங்க. கண்டிப்பா முதல் பரிசு நிச்சயம்.
மனசு ரொம்பவே பாரமா இருக்குங்க இளா
விசித்ரன் - வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க
மதுமிதா - வருகைக்கும், பின்னூட்டமிட்டதுக்கும் நன்றிங்க
பாராட்டிய, பின்னூட்டமிட்ட, புதிதாக வருகை புரிந்த அனைத்து மக்களுக்கும் நன்றி.
இளா,
உங்கள் படைப்பில் இருக்கும் மூன்று முத்தங்களில் நான் மிக ரசித்தது...
//முதலிரவு அன்று
நமக்குள் ஓடிய
குதிரைகள் அடங்கிய பின்
நீ கொடுத்த முத்தம் சொன்னது
காதலையா காமத்தையா?//
வாழ்த்துக்கள்.
அருமை அன்பரே
வாழ்க காதல்-வாழ்க காலம்
கெளதம்,சித்தன் -- > வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ரொம்ப நாளா இந்த வரப்பு கண்ணில படாம போயிருச்சு இளா, நல்ல கவிதை, போட்டியில ஜெயிக்க வாழ்த்துக்கள். கவிதை எழுதிட்டு படம் படம் தேடுவீங்களா? இல்லே படத்த வெச்சுகிட்டு கவிதை எழுதறீங்களா
//வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்//
இதுல காதல்
//நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது//
இன்னும் கொஞ்ச காதல்
//எதை எடுப்பது, எதை விடுப்பது?//
இதுல காமம்
//எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?//
பாசம்
//அனைத்தும் அன்றுதான்
தனிமையாய்!//
இதுல பிரிவு.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க விசித்ரன். வரப்பு ஆரம்பிச்சு 2 மாசம் கூட இருக்காதுங்க.
படத்தை வுச்சுகிட்டெல்லாம் எழுதறது இல்லீங்க. எழுதிட்டுதான் படம் தேடுறது வழக்கம். சில நேரங்களில் படம் சரியா அமையலைன்னா அதுக்கு தகுந்த படி எழுத்த மாத்திடவோம். சாராம்சம் மட்டும் குறையாம பார்த்துக்கனும் அதுதான் கஷ்டமே
பிரிச்சு மேய்ஞ்சு இருக்கீங்க.
பம்மல் உவ்வே சம்மந்தம் சொன்னது. தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது, அப்படியே மாத்தி கவிதை சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது. மண்டூகங்கள் மட்டுமே ஆராயனும், தப்பா எடுத்துக்காதீங்க. சங்கத்து மக்களுக்காக சொன்னது
excellent!
excellent!
Deekshanya--> Thank You Very Much
Deekshanya--> Thank You Very Much
ஒரே கவிதைல...வரப்பு கட்டி,வயலடிச்சு,ஏர் பூட்டி,நாத்து நட்டு,சாகுபடி பன்னி,தண்ணி பாய்ச்சு,யூரியா போட்டு,களை எடுத்து,அறுப்பு அறுத்து,போர் அடிச்சு,மூட்ட போட்டு,தேன் கூட்டுக்கு கொண்டு போய்டீங்க, பரிசும் வர வாழ்த்துக்கள்... :-)
வாழ்க்கையை மரணம் என்ற தலைப்பில் சொன்ன அருமையான கவிதை...
ஒவ்வொரு வரியும் அழகு...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என் வொட்டு உங்களுக்கும் உண்டு..
முதல் விதை என்னுது இளா.. வாழ்த்துக்கள் விவசாயி :)
முதல் வாழ்த்து என்னுது .. வாழ்த்துக்கள் விவசாயி :)
போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தி. ரா.ச
வாழ்த்துக்கள் இளா :)
மனமார்ந்த வாழ்த்துகள் இளா
வாழ்த்துக்கள்...:-))))
நன்மனம் & ஸ்யாம்- காலம் தவறினாலும் என்னுடைய நன்றி.
முதல் வாழ்த்துக்கு நன்றிங்க பொன்ஸ். முதல் நன்றியெனும் விதை விதைத்ததுக்கும் நன்றி. அப்படியே உங்களுக்கும் வாழ்த்துக்கள்
தி.ரா.சா- நன்றிங்க!
அருள் குமார்-நன்றிங்க!
மதுமிதா- நன்றிங்க!
இளா…
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தேன்கூட்டுக்கும் தமிழ்மணத்துக்கும் பாராட்டுக்கள்.
வாக்களித்த அனைவருக்கும் கை குலுக்கல்கள்.
சரியானது வென்றே தீரும், வெற்றியாளர்கள் வாழ்க:வளர்க!
அழியா அன்புடன்..
ஜி கௌதம்
குமரன்(எண்ணம்)- நன்றிங்க!
கெளதம்-நன்றிங்க!
VAAZHTHUKKAL ILA!
உள்ளதை உருக்கிய உணர்வு பொங்கும் கவிதை.
இளா....தொடரட்டும் உனது பயணம்....
என்றும் அன்புடன்,
"மேட்டுக்குடி" சரவணன்
படித்தேன்.... படித்தேன்.... 13 முறை படித்தேன் இன்னும் 130 முறை வேண்டுமானலும் படிக்கலாம்,
மனதில் நிறைவும் வலியும் ஒருசேர.....
வாழ்த்துக்கள் இளா, இதற்கு மேல் எதுவும் சொல்ல தெரியவில்லை...
//என்னை விட்டு
நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!
இன்று
தனியறையில் நான்,
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?
என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை.
உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!//
Engal manathil vendruviteergal, Padithu mudikum munn kannil kaneer thuligal thaan irundhadhu...
Excellent.
Prakash
Hi,
Itz really beautiful. I liked this very much. Varthai proyokangal is too good. Excellent. Keep it up.
Expecting more from u.
SweetVoice.
Kavidhai,
Migavum arumai !! Romba naal kalithu Thamizhai rusuthi dhoru unarvu !!
nanri !
நல்லதொரு உணர்வுப்பூர்வமான அனுபவும். நன்றி இளா..
அறுபது வருட வாழ்கையின் உணர்வுகளை ஒரு பக்க கவிதையில் அழகாய் சொன்னதிக்கு என்னோட சலாம்...
ஒரு கணவன் மனைவிக்கு இடையே உள்ள சம்பாசனைகளை இவ்வளவு இயல்பாகவும் இனிக்கவும் சொன்ன உங்கள் சிந்தனைக்கு ஒரு சபாஷ்...
இதை எதையும் அனுபவிக்காமலே இவ்வளவு அழகாக எழுதிய உங்களுக்கு ஒரு பலே..
அருமை! அவ்வளவுதான் சொல்லத்தோணுதுஒவ்வொரு வரியா திரும்பப் படிச்சு அனுபவிக்கப் போறேன்!எல்லா வரிகளும் நன்றாகஇருந்தது .நல்லா இருந்தது.போட்டியில் வெற்றி பெற நல்லதொரு உணர்வுப்பூர்வமான அனுபவும். ..வாழ்த்துக்கள்.
மனசுக்குள் மத்தாப்பூ ....... இதயத்தில் இனம் புரியாத ஒரு வலி...............
மிகவும் நன்று. மேன்மேலும் இதுபோன்று கவிதைகளை நோக்கி....
starting is very nice but match with period (70s).
Finish I expect something more punch.
All the way it is very touching.
Post a Comment