Aug 17, 2006

கனவும் ஆகஸ்டு 15ம்


விமான நிலையம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,

நண்பனை வெளிநாட்டுக்கு
வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,

நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்

டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....


சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

*(விவசாயி என்ற முகமூடியை கழட்டிய என் முதல் கவிதை)

18 விதை(கள்):

Anonymous said...

நாகை சிவா said...
சுகந்திர தின வாழ்த்துக்கள் இளா
எங்கு இருந்தால் என்ன நாம் என்றுமே இந்தியர்கள் தானே.
ஆன் சைட் கிடைக்க வாழ்த்துக்கள் ;)

8/15/2006 11:35 AM

Anonymous said...

அனுசுயா said...
இந்த வருத்தம் நிஜமாகவா? உங்களுக்கு என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

8/15/2006 12:45 PM

Anonymous said...

(துபாய்) ராஜா said...
உங்கள் ஏக்கங்கள் சுதந்திரம் பெற நாங்கள் எல்லோரும் உதவுவோம்.

8/15/2006 2:03 PM

Anonymous said...

ILA(a)இளா said...
இந்த மாதிரி கனவு, எனக்கும் ஒரு சமயம் இருந்ததுதான். பலமுறை வெளிநாடு சென்று வந்த பிறகு அந்த மோகம் குறைந்துவிட்டது. எப்படா விவசாய்ம பார்க்க போவோமென reverse Eng-ல் நினைக்கிற விவசாயி நான்.

8/15/2006 3:17 PM

Anonymous said...

(துபாய்) ராஜா said...
//"எப்படா விவசாயம் பார்க்க போவோமென reverse Eng-ல் நினைக்கிற விவசாயி நான்."//

இளா,பக்கத்து வரப்புல நமக்கும் ஒரு பாத்தி விட்டு வைங்க.

8/15/2006 4:14 PM

Anonymous said...

மின்னுது மின்னல் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

8/15/2006 5:10 PM

ILA (a) இளா said...

//பக்கத்து வரப்புல நமக்கும் ஒரு பாத்தி விட்டு வைங்க. //
இப்படியெல்லாம் சொல்றவங்க திரும்ப விவசாயத்துக்கு வரவேமுடியாதுன்னு என் கிராமத்து நண்பன் சொன்னாரு. விளக்கமா அடுத்த பின்னூட்டத்துல சொல்றேங்க

ILA (a) இளா said...

வாழ்த்துக்கு நன்றிங்க மின்னல்

Anonymous said...

முகமூடி போட்டபடி ஒரு கணினி தொழிலாளி. எல்லாருக்குமே இருக்கிற கனவுதானே இது, அதுக்காக இப்படியா சபையில போட்டு உடைக்கிறது. என்ன கனவா இருந்தாலும், வெளிநாடு போகனும்னு வெறி இருந்தாலும் நானும் ஒரு ஜெய் ஹிந்த் சொல்லிக்கிறேன்

Anonymous said...

கனவுகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

Unknown said...

கவலையே படாதீர்கள்.

டாலர் என்ன பவுண்ட் என்ன,இனி எல்லாமே இந்தியாவின் காலடியில்.இந்தியா இனி வளர்ச்சி பெற்ற நாடு.விரைவில்

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

ILA (a) இளா said...

செல்வன், நமக்கு இப்போ நாட்டை விட்டு போறதுனாலே எரிச்சலா வருதுங்க. எனக்கு முதல்ல நிறைய நாடு போகனும், அங்கேயே நிரந்தரமா தங்கனும்னு நினைச்சதும் உண்டு. ஒரு முறை, என்ன பலமுறை பல நாடுகளை பார்த்தப் பிறகு, விவசாயதுக்கு எப்போ போவோம் அப்படின்னு கனவு கண்டுகிட்டு இருக்கேன். இந்த கவிதை ஒரு கற்பனையே, இந்த கால கணினி வல்லுனர்களின் பலரின் கனவும் கூட

Anonymous said...

Hi Ila,

Nice Kavithai. Itz shows ur inner feelings. Orathula chinna varutham irukkum pola...mmmm...

Ungal kanavukal neraivera yen vazhthukkal.

SweetVoice

ILA (a) இளா said...

நன்றி அனானி

G.Ragavan said...

நாடு விட்டு நாடு போய்
வீடு விட்டு வீடு தங்கினாலும்
நான் நானாய் இருந்து விட்டால்
நான் இருக்கும் இடமே நான் பிறந்த ஊர்
விடுதலை என நினைத்தால்
ஒட்டுதலை விட முடியுமா?
என்னோடு எப்பொழுதும் கூட வருகிறதே!

ILA (a) இளா said...

//நான் இருக்கும் இடமே நான் பிறந்த ஊர்
விடுதலை என நினைத்தால்
ஒட்டுதலை விட முடியுமா?
என்னோடு எப்பொழுதும் கூட வருகிறதே! //
சரியான வார்த்தைகள் ஜி.ரா.

Deekshanya said...

awesome

Datta Ghosh said...

Hi, Nice lines (I read the translation)