பொங்கலுக்கும் பசிக்குதே
ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி, உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
பசி வந்த எந்தம்பி மட்டும்
அழும் குரலோடு.
"நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே"
விரட்டியது குண்டம்மா.
இந்த பொங்கல் நாளிலாவது
பசிக்கத் தெரியாமல்
இருந்திருக்கக் கூடாதா?
தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்
3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய
100 அடி உசரத்துல ஒரு நடிகர்.
குடம் குடமாய் பாலாபிசேகம்...
ஒரு தம்ளருல குடுங்கய்யா
தம்பி வயிறாவது நனையட்டும்.
ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி,
உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
பசியோட திரும்பவும் தம்பி அழ,
கையேந்தி ஆரம்பிச்சேன்
"அம்மா தாயே.."
பட உதவி-நன்றி-தினமலர்
9 விதை(கள்):
சிந்திக்க வேண்டியவர்கள்
சிந்திக்க அருமையான கவிதை
// குடம் குடமாய் பாலாபிசேகம்...
ஒரு தம்ளருல குடுங்கய்யா
தம்பி வயிறு நனைய...
//
இதை பார்த்தாவது பாலாபிஷேகம் செய்பவர்கள் திருந்தட்டும்
//சிந்திக்க வேண்டியவர்கள்
சிந்திக்க அருமையான கவிதை //
நன்றிங்க.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்....மாதிரிதாங்க இதுவும்/
கண்ணுல என்னையும் அறியாம தண்ணி வந்துருச்சு, ரொம்ப உருக்கமாக இருக்கு.
இது கடவுளுக்கும் பொருந்துமா? பொருந்த வேண்டும் என்பதே எனது கருத்து. இனிமேல் இப்படி அபிசேகம் செய்றவங்க அந்தப் பாலைக் குடிக்கனும்னு சட்டம் போடனும்.
பொற்கொடி-->உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல
//இதை பார்த்தாவது பாலாபிஷேகம் செய்பவர்கள் திருந்தட்டும் //
திருடனாய் பார்த்து திருந்தாதாங்க உண்டு. வீட்ல காசை திருடிக்கிட்டு வந்து தலவருக்கு அபிஷேகம் பண்ற ஆளுங்க இருக்கிற நாடுங்க நம்ம நாடு.
மனசாட்சி: ஹ்ம்ம், நல்ல நாள் அதுவுமா இப்படி ஒரு சிந்தனை தேவையா விவசாயி?
வலிக்கின்றது.....
இளா
இன்னைக்குத்தான் உங்க ப்ளாக்கை பார்த்தேன் அப்படியே எங்க ஊரு வாசம் , இனிமே தினமும் ஆஜராவேன்...சரீங்களா!!! இன்னும் நம்மூரு கலெக்டட் மாறலையோ....
நாளைக்கு வாறேனுங்க.... இளா...
நல்ல கருத்தை சொல்லி இருக்கீங்க இளா...
Post a Comment