Nov 17, 2006

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!





என்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டு மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?





உன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.




பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?





உன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?



காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?




(தொடரும்)

18 விதை(கள்):

சத்தியா said...

ம்... அற்புதம்.
ரசிக்கக் கூடிய கவிதைகள்.

வாழ்த்துக்கள்.

சாத்வீகன் said...

//மனைவியான போது
//காதலியாகச் சொன்னாய்,

நன்று.

//(தொடரும்)

தொடரட்டும்....

Anonymous said...

இது என்ன காதல்த்தனமா இருக்கு...

நாமக்கல் சிபி said...

ஆஹா! அற்புதமான கவிதை இளா!

எப்படிங்க பொண்ணுங்க மனசுல வரும் காதலை படம் பிடிச்சா மாதிரி எழுதிட்டீங்க?

குறிப்பாகச் சுட்டிக்காட்டி சொல்லவேண்டுமென்றால்

http://varappu.blogspot.com/2006/11/1.html

இங்கே இருக்கிறது. நான் சுட்டிக் காட்ட விரும்பிய வரிகள்.

அனுசுயா said...

நல்ல கவிதை. ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து ஆண் எழுதுவது அதிசயம். நன்றாக உள்ளது.

ILA (a) இளா said...

சத்தியா, சாத்வீகன்-->நன்றி

தியாகராஜன்->அப்படிதாங்க. வருகைக்கும் ஊட்டத்துக்கும் நன்றி

ILA (a) இளா said...

சிபி-->வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள் பல.

Unknown said...

mmm...Hmmmm...mhummmmm...mmmmmmmm

ILA (a) இளா said...

//mmm...Hmmmm...mhummmmm...mmmmmmmm //
நன்றி

G.Ragavan said...

காதல் கவிதைகளா எழுதித் தள்றீரு..ம்ம்....ஜூனியர் வெவசாயி வந்தப்புறமும் காதல் கவிதை எழுதுறது வீட்டுல தெரியுமா? ;-)

சீனு said...

arumaiyenaa kavithaigal..nandraga ullana..

ILA (a) இளா said...

//ஜூனியர் வெவசாயி வந்தப்புறமும் காதல் கவிதை எழுதுறது வீட்டுல தெரியுமா?//
தெரிஞ்சுதானே எழுதறேன், அப்புறம் எதுக்கு இந்த பில்டப்பு?

ILA (a) இளா said...

\\arumaiyenaa kavithaigal..nandraga ullana.. \\
பின்னூட்டத்துக்கும், வருகைக்கும் நன்றிங்க சீனு

Deekshanya said...

:) carry on the gud work!
Deeksh

ILA (a) இளா said...

//carry on the gud work!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க தீக்ஷன்யா..

கதிர் said...

கவுஜைகள் நன்று! :))

கவுஜையாக வாழ்வோம்!

Anonymous said...

//காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?//
super lah.a sweet poem!keep up the good work.

芳芳葉 said...

http://tw.mc740.mail.yahoo.com/mc/welcome?.gx=1&.tm=1305524349&.rand=eteuhgfnkj2gq#_pg=showMessage&sMid=2&&filterBy=&.rand=1603962912&midIndex=2&mid=1_1308535_AEgM1nQAAG4GTdCMAg3xvnRIRLU&fromId=donotreply@godaddy.com&m=1_1316498_AEcM1nQAAXcdTdC6jgyugmCpaII,1_1312152_ADAM1nQAAGt5TdCX4QNq607avMs,1_1308535_AEgM1nQAAG4GTdCMAg3xvnRIRLU,1_1307376_ADwM1nQAABayTdCLRQcLQjYgqJE,1_1304952_ADkM1nQAAYASTdCCoweoojgeRwk,1_1304042_AEIM1nQAANzVTdCBmQv%2FTHCzvIU,1_1301934_AEAM1nQAAE1mTdBa8QwC1CuMvA0,1_1288339_ADkM1nQAAEmpTc%2F9MQO1bFu1MwY,&sort=date&order=down&startMid=0&hash=3954d0250a36621e0f9babade4275f78&.jsrand=2228620