Nov 6, 2009

காதலியைத் தானம் செய்த மணவறை

பத்து விரல்களால் அவளைக் கற்பழிக்கிறேன்,
கீபோர்டில் என் கைகள், மானிட்டரில் அவள்.
கற்புநெறி மறந்தவிட்டிருந்தன
இணைய விடுதிகள்.


அரசியல்வாதிகளின் புரட்டு,
அதிகாரிகளின் அலட்சியம்,
எல்லாம் சேர்ந்த
சமூகத்தின் மீது கோவம்
அனானியாய் திட்டிவிட்டேன்
ஒரு பதிவில்
கோவம் தணிந்திருந்தது.

பார்த்த இடமெல்லாம் காமம்
பார்ப்பதெல்லாம் காமம்
வெந்துத் தணிந்தது காடு
வாழ்க்கை மீது பயம் வந்திருந்தது.

நண்பர்களைத் தொலைத்த தேசம்,
காதலியைத் தானம் செய்த மணவறை,
சத்தியம் செய்த தலைகள்,
மெய் மறுத்த விழிகள்,
எல்லாம் ஞாபகம் வருவதில்லை
மீண்டும் தவறிழைக்கும்போது.

4 விதை(கள்):

ராம்குமார் - அமுதன் said...

நல்ல கவிதை...

தெய்வசுகந்தி said...

நல்ல கவிதை. உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

aahaa..super

விக்னேஷ்வரி said...

அருமைங்க. ரொம்பப் பிடிச்சிருக்கு.