Dec 11, 2009

முண்டாசுக் கவி

பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து!
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?

பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.

உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.

உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?

அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.

பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!

வாழ்க தமிழனும், தமிழும்!

Pic : Thanks http://www.flickr.com/photos/balu/

23 விதை(கள்):

ஆளவந்தான் said...
This comment has been removed by the author.
ஆளவந்தான் said...

அவரு மாதிரியே கோபபட்டு இருக்கீங்க :)

S.A. நவாஸுதீன் said...

கோபம் நியாயமானதுதான். வெற்றி பெற வாழ்த்துக்கள்

கமலேஷ் said...

மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.


நன்றாக கோபமும், இயலாமையும் வெளிப்படும் கவிதை...

கார்க்கி said...
This comment has been removed by the author.
கார்க்கி said...

அந்த மச்சம் எந்த படம்ன்னு சொன்னிங்கன்னா பார்க்க கிளம்பிடுவேன்...

இப்படிக்கு,
வெட்கங்கெட்ட இன்னொரு தமிழன் :((

thenammailakshmanan said...

//அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்//

அருமை இளா

வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஜெனோவா said...

நியாமான கோவந்தான் ..

வாழ்த்துக்கள் இளா !

Vidhoosh said...

ரொம்ப கோவமா இருக்கீங்க போலருக்கு. அப்பறம் வரேன்.

-வித்யா


வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தியாவின் பேனா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பலா பட்டறை said...

கோபமும், நியாயமும்
அருமை

வெற்றி பெற
வாழ்த்துக்கள்..

முனைவர்.இரா.குணசீலன் said...

உண்மைதான் நண்பரே...
சமூக நிலை இதுதான்..
கருத்தை அழகாக எடுத்தியம்பியுள்ளீர்கள்...

வெ.இராதாகிருஷ்ணன் said...

பாரதியை மட்டும் மறக்காது, பாரதத்தையும் மறந்து போனோம் எனும் அருமையான கவிதை.

வெற்றி பெற வாழ்த்துகள்.

henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

punitha said...

உங்கள் உணர்வுக்கு தலை சாய்க்கிறேன்.

உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் உணர்வு மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

pinkyrose said...

enna ila intha pakkamae kaanum ..
tamilla eluthiyikan come n visit then comment...

Ananthi said...

என்றும் அழிந்து விடக்கூடாத பாரதியின் கவிதைக்கு,

கனல் வார்த்தையால் ஒரு கவி பாடி இருக்கீங்க.

வாழ்த்துக்கள்.. !!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

வாழ்த்துக்கள்!

amas said...

ரௌத்ரம் பழகு!

amas32

கவிதா | Kavitha said...

இந்த மாதிரியான உங்க (கவிதை) பதிவுகளை படிக்கும் போது நீங்க தான் எழுதனீங்களான்னு எனக்கு டவுட் வரும்... அதே தான் இதிலும்...

இது நீங்களே எழுதினதா? இல்ல மண்டபத்தில் யாராச்சும்.... ?!!