வரப்பு
உழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.
வாழ்வினை திரும்பி பார்க்கையில்
மனதில் பறந்த பட்டாம் பூச்சிகள்,
சொல்ல முடியா கற்பனைகள்,
சொல்லாமல் தீண்டிய முட்கள்,
தாண்டி வந்த படுகுழிகள்,
தொண்டை வரை வந்து முழுங்கப்பட்ட வார்த்தைகள்,
கண்களில் தோன்றி மனதில் புதைந்த ஆசைகள்
எல்லாவற்றையும் அசை போட எனக்கு இந்த வரப்பு.
9 விதை(கள்):
வரப்பில் கால் வைப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடன் சேர்ந்து நானும் இங்கு இளைப்பாற முடியும் என எண்ணுகிறேன். வரப்போரம் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துகள்.
வரப்பில கால் வெச்சதுக்கு நன்றி, அடிக்கடி வந்துட்டு போங்க
இளா, வாங்க வாங்க.. வரப்பு நல்லாவே இருக்கு..:)
இந்தியன் டெம்ப்ளேட் எடுத்தீங்க போலிருக்கு.. அதுல ஏதோ பிரச்சனை.. ஒழுங்கா கமெண்ட முடியலை.. டெம்ப்ளேட்டைக் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி சரி பண்ணுங்க..
வரப்பு
வரம்பில்லாமல்
கவிதை
பாயும்
கால்வாய் ஓரம்
கால் நனைக்கக்
காத்திருக்கிறேன்
இளா :)
வரப்புயர நீர் உயரும்!
நீருயர நெல் உயரும்!
வாழ்த்துக்கள் இளா!
பொன்ஸ்--> வரப்புக்கு வந்ததுக்கு நன்றிங்க பொன்ஸ், டெம்ப்ளெட்டையும் பார்க்குறேங்க.
சிபி--> வரப்புக்கு வந்ததுக்கு நன்றிங்க சிபி.
நவீன் -->வரப்புக்கு வந்ததுக்கு நன்றிங்க நவீன். உங்களை மாதிரி பெரியவங்க கால் பட வரப்புக்கு கொடுத்து வெச்சு இருக்கனும்ங்க. உங்க பதிவும் தான் என்னை இந்த மாதிரி ஒரு வரப்பை கட்ட வெச்சது.
பரப்பின்றிப் படர்ந்திருக்கும்
பச்சைப்பயிருக்கும் காவலாகி,
இரைப்பெடுக்க வேலை செய்து
களைத்தவர்க்கும் இடமளிக்கும்
வரப்பின் மேலமர்ந்து
வரி பாட வந்தவரே!
வருக! வருக!
வளமான கவிதைகள்
தருக! தருக!
Post a Comment