Jun 26, 2006

அந்தி மாலை!

பொழுதுபோக்கிலேயே அதிக செலவு வைப்பது புகைப்படம் எடுப்பது(1990களில்). வரப்பில் என்னுடைய சில அரிய(?!) புகைப்படத்தையும் போட எங்க வீட்டுல சில பேரு சொல்ல தட்ட முடியல. அதனால இனிமே சில நான் சுட்ட (திருடியது இல்லை) படத்தினயும் வரப்பில் ஆர் அமர்ந்து காணலாம்.

1993, ஐயன் பொட்டி கேமரா வாங்கிக் கொடுத்த காலம் அது. சந்தோஷ் சிவனும், பி.சி யும் நமக்குள்ள குருவா இருந்த போதுதான் இந்த படம் புடிச்சேன். எங்க மொட்ட மாடியில இருந்து எங்க ஊரு மலையை பல்லாயிரம் தடவை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஒரு வித்தியாசமான ஒரு பார்வையை தந்தது.

11 விதை(கள்):

நாமக்கல் சிபி said...

என்ன மலைங்க இது?

ILA (a) இளா said...

சின்ன காப்பராயன் மலைன்னு பேருங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

படம் கமிக்கிறதுன்னு தீர்மானம் ஆயிடுத்து. ம்ம்ம் பண்ணுங்க நாங்க பாத்துகிட்டே இருக்கோம்.கலப்பை பிடிக்கிற கையில் கேமிரா பிடித்தாலும் மலையையும் ஒரு கலையம்சத்தோட இருக்கு.அன்பன் தி ரா ச

ILA (a) இளா said...

//மலையையும் ஒரு கலையம்சத்தோட இருக்கு//
நன்றிங்க, எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம்தான்.

நாகை சிவா said...

//எங்க வீட்டுல சில பேரு சொல்ல தட்ட முடியல//
சில பெயரா, இல்லை ஒருத்தரா.......... :))))

//மழை தண்ணீயில்லைனாலும்
மாடு மேக்க தேவையில்ல பங்காளி...
படம்புடித்தே பவிசா வாழ்ந்திடுவிங்க போல....... //
உங்களை கலாய்ப்பதற்கு வீட்லே ஆளு ரெடியா இருக்கு போல.........

இயற்கையை ஒவ்வொரு முறை பார்க்கும்(கேமரா வழியாக) போது ஒவ்வொறு மாதிரி தெரியும். இதே மலையை இன்னும் பல கோணங்களில் படம் பிடித்து போடும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

Anand V said...

அருமையான வண்ணங்கள்.

கைப்புள்ள said...

ப்போட்டா படம் அருமையா இருக்கு. போட்டா புடிக்க எம்புட்டு காசு குடுத்தீய?

ILA (a) இளா said...

காசு குடுத்து வாங்கிட்டு வர இது என்ன கவிதையா? இல்லே நான் தான் தருமியா?

கைப்புள்ள said...

//காசு குடுத்து வாங்கிட்டு வர இது என்ன கவிதையா? இல்லே நான் தான் தருமியா?//

கோச்சிக்கிடாதீய சாமீ...அல்லாம் ஒரு டமாசு தான்.
:)

கைப்புள்ள said...

சொல்ல மறந்துட்டேன்...படம் உண்மையிலேயே ரொம்ப நல்லாருக்கு.

ILA (a) இளா said...

நாகை சிவா-->//சில பெயரா, இல்லை ஒருத்தரா//ஒரு பெரிய கும்பலே இருக்கு
\\இதே மலையை இன்னும் பல கோணங்களில் படம் பிடித்து போடும்படி கேட்டுக் கொள்கின்றேன். //
கண்டிப்பா முயற்சி பண்றேங்க


கைப்புள்ளை-நன்றிங்க ஷாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்