Oct 11, 2006

வேலை வேலை வேலை...

இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்த படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
"உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.

ரகு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம்".

ஆனால் ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.

போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், ரகு.

பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராம்.

வெளியே ஏமாற்றத்துடன் வந்த ரகு
"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"

"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராம்.

18 விதை(கள்):

கோவி.கண்ணன் [GK] said...

இளா...!

மீண்டு(ம்) வந்ததற்கு பிறகு, ஒரு தத்துவ பதிவு !

:)
வரப்புயர..!

SK said...

எளிமையான, தேவையான பயனுள்ள தகவல் , இளா.

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இராம் said...

ஹி ஹி நம்ம பேரு வைச்சாலே என்னிக்கும் வெற்றிதான்...

இலவசக்கொத்தனார் said...

உங்க தலய ஒருத்தர் குண்டக்கன்னா என்ன, மண்டக்கன்னா என்னான்னு கேள்வி கேட்டாரே. அதுக்கு அவரு பதில் யோசிச்சு வெச்சாரா இல்லையா?

:D

G.Ragavan said...

ஊக்கம் கொடுக்குறீங்களா! நல்லாருக்கு கருத்து. சரிதான்.

ILA(a)இளா said...

நன்றி! கோவி.கண்ணன். மீண்டு(ம்) வந்திருக்கேன் அப்படியெல்லாம் சொல்ல முடியாதுங்க. இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம். இன்னும் நம்மள ஞாபகம் வெச்சு இருக்கீங்களே அதுவே போதுங்க. அதுக்கும் ஒரு நன்றி சொல்லிக்கிறேங்க.

ILA(a)இளா said...

//மீண்டு(ம்) வந்ததற்கு //
உங்க வாய் முகூர்த்தம் பதிவுலகத்துக்கு திரும்ப வந்தாச்சு. ரெடி, ஸ்டார்ட் மியுசிக்

ILA(a)இளா said...

//எளிமையான, தேவையான பயனுள்ள தகவல் , இளா//
எதோ தோணினதை சொன்னேங்க அவ்வளவுதான். நன்றி!

ILA(a)இளா said...

//உங்க தலய ஒருத்தர் குண்டக்கன்னா என்ன, மண்டக்கன்னா என்னான்னு கேள்வி கேட்டாரே. அதுக்கு அவரு பதில் யோசிச்சு வெச்சாரா இல்லையா? //
இதுக்கு கைப்பு பதில் சொன்னா:

இதெல்லாம் இங்கே பேசப்படாது. சங்கத்துல பேசனும். இதென்ன வரப்புல வந்து கேக்குறது? அண்ணன் கோவிச்சுக்குவேன் இல்லே. பார்த்து பேசனும். இல்லாட்டி ஆப்பா விழும்.

ILA(a)இளா said...

//ஊக்கம் கொடுக்குறீங்களா! நல்லாருக்கு கருத்து//
ஊக்கம் குடுக்குற அளவுக்கு இன்னும் நாம் பெரிய ஆள் ஆகலைங்க. ஏதோ ஒரு ஞானம். அவ்வளவே.

Anonymous said...

It is good and valid point. Thanks for the Info

நாகை சிவா said...

//ஊக்கம் குடுக்குற அளவுக்கு இன்னும் நாம் பெரிய ஆள் ஆகலைங்க. ஏதோ ஒரு ஞானம். அவ்வளவே. //

இருந்தாலும் நீங்க தன்னடக்கத்துக்கும் கீழ போறீங்க....
:)

/ஹி ஹி நம்ம பேரு வைச்சாலே என்னிக்கும் வெற்றிதான்... //

போதும் அடங்கு.....

Anonymous said...

so ur friend got the chance u missed or what???

தாணு said...

அவர் என்ன பதில்தான் சொன்னாரு, கடசியா?

ILA(a)இளா said...

அட, வாங்க தாணு, ரொம்ப நாளா பதிவுலகம் பக்கமே காணோம்?

ILA(a)இளா said...

//so ur friend got the chance u missed or what???//
இது ஒரு நடந்த கதைங்க. நாம, கொஞ்சம் மானே தேனேன்னு போட்டு ஒரு கதையாக்கிட்டோம்.
அவ்வளவுதானுங்க.

இலவசக்கொத்தனார் said...

நல்லா கத விடுறீங்களே!! ச்சே, கதை சொல்லறீங்களே!

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘