Sep 4, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

குரோதம், துரோகம், இச்சை,
துவேஷம், தாபம் - எல்லாம் கடந்துவர;
இங்குமங்கும் அலைபாய்ந்தபடி
மனதினுள் கருமேகங்கள்.


நேற்று,
பொதுவழித்தடம் ஒன்றில்
காலடிப்பட்டு குற்றுயிருராய்
நான் கண்ட செடி.

இன்று,
புதிதாய்
துளிர்விட்டு நுனியில்
பனித்துளி ஏந்தி
என்னைப்பார்த்து புன்னகைத்தது.


நிமிர்ந்து பார்த்தேன்
தெளிவாய் வானம்,
என் மனமும்.

# தமிழ்ச்சங்கம் போட்டிக்காக இல்லை.

6 விதை(கள்):

ப்ரியன் said...

அழகாய் இருக்கிறது ஆகாயக் கவிதை

அனுசுயா said...

Really super Kavithai. Nalla sinthanai.

கைப்புள்ள said...

//நிமிர்ந்து பார்த்தேன்
தெளிவாய் வானம்,
என் மனமும்.//

எல்லாவற்றையும் இழந்தாலும், எல்லாமுமே தவறாக நடந்தாலும், நம்பிக்கை என்ற ஒன்று இன்னும் இருப்பதனால் உலகம் இயங்குகிறது அல்லவா?

கவிதை அருமை.

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா!

ILA (a) இளா said...

நன்றி--> ப்ரியன்,அனுசுயா, கைப்புள்ள,கொத்ஸ்

Porkodi (பொற்கொடி) said...

நல்லாருக்குங்க :)