May 12, 2008

சோடி போடலாமா சோடி

முள்ளை முள்ளால் கூட எடுக்கலாம்,
புகையை புகை வைத்து அணைக்க முடியுமா?
இரண்டு வெண்குழல் வத்திகளை வெச்சு புகைத்தல் தப்புன்னு சொல்ல நினைச்சேன்.


எத்தனை நாளைக்குத்தான் வூட்டுக்காரர் நிழலுல நிக்கிறது. அதான் வேலைக்குப் போலாம்னு இருக்கேன்.




காட்சி-1:

பெண்ணீயம்- பாரதி, இதுக்குத்தானா ஆசைப்பட்டாய்.

நீங்க சாண்ட்ரோ வெச்சு இருக்கீங்க, எனக்கு வேகன் ஆர் வாங்கி குடுங்க. அதுதான் சமத்துவம். இல்லாட்டி என்னை அடிமையா வெச்சு இருக்கீங்கன்னு எழுதிடுவேன், ஜாக்கிரதை. வாடி, போடான்னு சொன்னா புகார் குடுத்துருவேன், ஆமா.

காட்சி-2

சமத்துவம்- பாரதியும் காணாத பெண்ணீயம்.

ஏண்டி, கூலிய குடுத்தேனே, அதுலதான பலசரக்கு வாங்கின?


இல்ல மச்சான், உன்னோட சம்பளத்துல உனக்கு வேட்டி எடுத்துட்டேன். எத்தினி நாளிக்கு அத்தையே கட்டுவே? என்னோட கூலில கருவாடு வாங்கி குழம்பு வெச்சிருக்கேன். வந்து துன்னுடா மச்சான்.

ஜோடியில் ஆண் பாதணியில் ஊக்கு போட்டு இருப்பது- ஆண் எவ்வளவோ சிரமத்துக்கு இடையில் பொருளீட்டுகிறான். தன்னை அலங்காரம் செஞ்சுக்க மறந்துட்டு குடும்பத்துக்காக உழைக்கிறாங்க. ஆனால் சில பொண்ணுங்க அதைப் புரிஞ்சிக்காம டாம்பீக வாழ்வு வாழ நினைக்கிறாங்க. இது வரட்டு கெளரவம்தானுங்களே. அதுக்கு அர்த்தம் வர மாதிரி பெண் பாதணி விலையுயர்ந்ததா பக்கத்துல வெச்சேன். அதாவது புது பாதணி, குதி
(high heel) பெரிசா. இது ஆணுக்கும் பொருந்தும், பொண்ணுக்கும் பொருந்தும். அதே போல இந்த ஜோடிய ஆணோ, பெண்ணோ போட்டுக்க முடியாது. இந்தமாதிரி சமமில்லாத ஜோடி உபயோகப்படாது அப்படிங்கிற அர்த்தம் தான் அந்தப் படத்துக்கு. இது என் மனசுல பட்டது. வேற அர்த்தம் கூட இருக்கலாமா?

21 விதை(கள்):

ILA (a) இளா said...

மூன்றாவது படம் PIT போட்டிக்காக.

SurveySan said...

நல்லாருக்கு.
மூணாவது கொஞ்சம் வெளிரிப்போன மாதிரி இருக்கே?

இலவசக்கொத்தனார் said...

என் இனிய தமிழ் மக்களே. இது கதை இல்லை. நம்மிடையே நாள்தோறும் நடந்து கொண்டிருக்கும் ஒரு காவியம்.

அவன் ஏழை. அவளோ பணக்காரி. ஆனா காதலுக்கு அவங்க பொருளாதார நிலமை எல்லாம் தெரியுமா? வந்திருச்சு. அவங்க ரெண்டு பேருமே ரொம்ப லவ் பண்ணறாங்க.

எப்படியாப்பட்ட லவ்வுன்னா ஓருடல் ஓருயிரா லவ் பண்ணறாங்க. உடம்பில் ஒரு பாகத்தையே பார்வதியாக் கொண்ட சிவன் மாதிரியான அன்பு. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.... எக்ஸெட்ரா எக்ஸெட்ரா...

ஆனால் பழகப் பழக அவங்களுக்கிடையே ஒவ்வொண்ணா பிரச்சனை வருது. அந்த பொண்ணு ஆசைப்படறதை அவனால செய்ய முடியறது இல்லை. அவன் நினைக்கிற மாதிரி அவளால இருக்க முடியறது இல்லை. அவங்க அவங்க வளர்ந்த சூழல் அப்படி. அதனால பிரச்சனை வருது.

வாழ்க்கையில் பிரச்சனை என்பது போய் பிரச்சனையே வாழ்க்கை அப்படின்னு ஆகும் பொழுது ஒரு நாள் சட்டுன்னு போடா போடான்னு பிரிஞ்சு போயிடறாங்க அந்தப் பொண்ணு. அதுக்கு மனசுக்கு பிடிச்சது எல்லாம் செஞ்சு தரா மாதிரி ஒருத்தன் கிடைச்சுட்டானோ என்னவோ. அது பாட்டுக்கு அது வழியில் போயிடுது.

இந்தப் பொண்ணே உலகம் அப்படின்னு இருந்த இவன், குப்புற அடிச்சு விழுந்து, தாடி எல்லாம் வளர்த்து, கவுஜ எழுதிக்கிட்டு, தண்ணி அடிச்சுக்கிட்டு பயித்தியமா இருக்கான். நீங்களே சொல்லுங்க, லெதர் செருப்புல லெதர் வார் வெச்சு முடிச்சுப் போடற பொண்ணு கிட்ட ரப்பர் செருப்புல ஊக்கு வெச்சு போட்டுக்கிறவனுக்கு என்ன வேலை?

இலவசக்கொத்தனார் said...

இப்படி பல பத்திகளில் சொல்ல வேண்டிய கதையை சும்மா சிம்பிளா ஒரே ஒரு படத்தைப் போட்டு சொல்லி இருக்கும் நிழற்பட நாயகன், போட்டோ எடுக்கும் சூப்பர் ஸ்டார், அண்ணன் இளா அவர்கள் திறமைக்கு ஒரு சல்யூட்.

வல்லிசிம்ஹன் said...

இளா,
படங்களும் நல்லா இருக்கு. கதையும் நல்லா இருக்கு.

அவள் ஆடம்பரம் அவன் ஏழை.

இது ஒரு கதை.
இன்னொன்று காதல் கணவனுக்காக கருவாட்டுக் குழம்பு வைக்கும் அன்பு மனைவி.
எல்லாமே பாதிபாதி தானெ வாழ்க்கை.

கப்பி | Kappi said...

ஒரு படத்துல இம்புட்டு மெசெஜா..அவ்வ்வ்..

படம் கலக்கல்!! வாழ்த்துக்கள்!!

NewBee said...

இளா,

வாழ்த்துகள்.

படம், விளக்கம் இரண்டுமே நல்லா இருக்கு.

இன்பம்-துன்பம், கோபம்-காதல்,சண்டை-சண்டை எல்லாமே இரண்டு பக்கமுமே இருந்தாத்தான் 'ஜோடி'-யோ?

இல்லேனா bore அடிக்கும்ல?

பி.கு:இதை நான் எழுதும் போது பக்கத்தில் யாரும் இல்லை :D

ILA (a) இளா said...

//மூணாவது கொஞ்சம் வெளிரிப்போன மாதிரி இருக்கே?//
by designங்க. காரணம். ஊக்கு நல்லா பளிச்சுன்னு தெரியனும்னா அந்தப் பக்கம் கொஞ்சம் darkஆ இருக்கனும். போக போக கொஞ்சம் வெளுத்தா மாதிரி இருந்தா நல்லா இருக்குமேன்னு செஞ்சதுதாங்க இது.

ILA (a) இளா said...

//இப்படி பல பத்திகளில் சொல்ல வேண்டிய கதையை சும்மா சிம்பிளா ஒரே ஒரு படத்தைப் போட்டு சொல்லி இருக்கும் //
கொத்ஸ், உங்க கற்பனைத் திறமைக்கு முன்னாடி நானெல்லாம் நிக்க முடியுமா? நன்றிங்க.

ILA (a) இளா said...

@valli &kappi-thanks
@New Bee-//bore அடிக்கும்ல?//
ulkuthu illeye?

துளசி கோபால் said...

வாய்யா கொத்ஸ்.

இப்படிப் படத்தை ஏப்பம் விட்டுட்டீர்:-))))

கதை சூப்பர்!!!

இராம்/Raam said...

// கப்பி பய said...

ஒரு படத்துல இம்புட்டு மெசெஜா..அவ்வ்வ்..

படம் கலக்கல்!! வாழ்த்துக்கள்!!//

ரீப்பிட்ட்டு....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படிங்கிற அர்த்தம் தான் அந்தப் படத்துக்கு. இது என் மனசுல பட்டது. வேற அர்த்தம் கூட இருக்கலாமா?
//

இல்லவே இல்ல! இருக்கவே முடியாது! அண்ணன் இளா சொன்னதுக்கு மேல வேறொரு அர்த்தமும் இருக்க முடியுமா?

சும்மாப் pin-ட்டீங்க தல! :-))

Athi said...

Ila... First pic is fantastic. Concept'um romba kalakkalaa irukku. Athaiye kooda pottikku pottirukkalaam. However its ur wish.

And, remaining two pics'um concept class'aa irukku. Kalakkureenga.

ராஜ நடராஜன் said...

படத்துக்கு பின்னூட்டமிடலாமின்னு வந்தா கொத்ஸ் கதையில மூழ்கிட்டேன்.

Illatharasi said...

படங்களுக்கு சொன்ன கதைகள் அருமை!

செருப்புக்குள் இவளோ பெரிய messageஆ........

அகரம் அமுதா said...

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையை விளக்குவதாக உள்ளது. பாராட்டுக்கள்

Madurai citizen said...

படங்களுக்கு சொன்ன கதைகள் ஒரு காவியம். அருமை!

செருப்புக்குள் இவளோ பெரிய கதைகள்

படத்துக்கு பின்னூட்டமிடலாமின்னு நான் வந்தா கொத்ஸ் கதையில மூழ்கிட்டேன்

கோவை விஜய் said...

படங்களும் விளக்கங்களும் அருமை.3 வது படம் "சூப்பர்'
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Tech Shankar said...

http://vijaybalajithecitizen.blogspot.com/2008/08/microsoft-sharepoint-administrator.html

sharepoint administrator point of view

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நல்ல பதிவுங்க.