Nov 8, 2008

ராமனைத் தேடும் தமிழர்கள்

தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
இராமாயணம்.
இராவணன் உருவில்
பக்க்ஷே இருக்க
ராமனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்

15 விதை(கள்):

இலவசக்கொத்தனார் said...

அப்போ நம்ம ஊர் அரசியல்வாதிங்க சொல்லிக் குடுத்த பாடத்தின்படி நாம (நாமன்னா தமிழர்கள் நீங்க நினைக்கும் அந்த முத்திரை இல்லை) எல்லாம் ராஜபக்‌ஷேவுக்குத்தான் சப்போர்ட் செய்யணமுன்னு சொல்லறீங்க. இல்லையா?!

அப்புறம் இது கவுஜன்னா சரியா டிஸ்கி போட்டு சொல்லுங்க. இந்த பின்னூட்டத்தை வாபஸ் வாங்கிக்கறேன்.

குடுகுடுப்பை said...

ராவணன் இனப்படுகொலை செய்தாரா என்ன?
ராமன்,ராவணன் காவிய நாயகர்கள் அவர்களை இக்கால அரசியலோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Unknown said...

என்னை விட வீரமுள்ளவர்கள் வரட்டும்னு தலைவர் சொல்லிருக்காரு... நீங்க இப்படி சொல்றீங்க:-)

என்னை கேட்டா, ஹ‌னுமான் இருந்தா கூட போதும்.

நசரேயன் said...

கவிதை நல்லா இருக்கு

முத்துகுமரன் said...

ராமனைத் தேடிக்கொண்டு எப்போதும் தமிழர்கள் இருந்ததில்லை. எல்லா கால ராமன்களும் தமிழனுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறார்கள். ராமாயணம் பெண்ணுக்கான போர். இலங்கையில் நடப்பது மண்ணுக்கான போர். மேலும் ராமயணம் கதை, இலங்கையில் நடப்பது எதார்த்தம். ராவணன் மரியாதைக்குரியவனாக வணங்கப்பட வேண்டியவன். ஏனென்றால் ராமராஜ்ய/ராமபக்தர்களின் தாயான சீதையின் கற்பிற்கு கடைசிவரை களங்கம் ஏற்படுத்தாதவன்.

வார்த்தைப் படிக்கட்டு நன்றாக இருக்கிறது.களைகள் அதிகமிருப்பதால் உண்மைதான் இல்லை.

ILA (a) இளா said...

//ராமனைத் தேடிக்கொண்டு எப்போதும் தமிழர்கள் இருந்ததில்லை//

அப்போ இப்போ இருக்குற மக்கள் உதவி கேட்கலைன்னு சொல்றீங்களா??


இதுக்கான என் அர்த்தம்.
-------------------------

சீதையா இருக்கிற தமிழ் மக்கள், ராமனா இருக்கிற இந்தியாவை எதிர்பாத்து காப்பாத்துவாங்கன்னு காத்துட்டு இருக்காங்க. இராவணன்னு தெளிவா இலங்கை அரசைச் சொல்லியாச்சு. இதுல களை எங்கே இருக்கு??

ILA (a) இளா said...

//ராவணன் இனப்படுகொலை செய்தாரா என்ன? //
:) ஒப்பீட்டை நான் சரியாச் சொல்லலன்னு நினைக்கிறேங்க.

முத்துகுமரன் said...

//இதுக்கான என் அர்த்தம்//
உங்களுக்கான அர்த்தத்தோடு மட்டும் கவிதை நின்றுவிடுவதில்லை.

சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் கோணத்தில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ராமயணக் கதைப்படி அயோத்தியின் சீதை கடத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் பூர்வகுடிகள்.ஒப்பீடுகளுக்கள் அரசியலின்/ஆளுமைகளின் செல்வாக்கை புறக்கணிக்க இயலாது. வரலாறுகளின்படி முன்பு தாங்கள் ஆண்ட, தங்களுக்கு உரிமையான தங்களது நிலத்தை மீட்க இப்போது போராடிக் கொண்டிருக்க்கிறார்கள். ஒரு சில காட்சி ஒத்தமைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு மொத்தத்தையும் அதே சட்டகத்திற்குள் வைக்கும் அர்த்தத்தோடு உங்கள் கவிதை அமைந்திருக்க்கிறது. நுட்பமான அந்த பிரச்சனைக்குள் பன்முகத் தன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அதன் மீதான பார்வைகள் இல்லாதிருப்பதாக நான் உணர்ந்ததாலே களை என்று சொன்னேன். இது உங்கள் கவிதைக்கான எனது புரிதலே! அதற்கான உங்கள் மறுப்பை நான் நிராகரிக்கவில்லை. ஏற்கவும் இல்லை

//இந்தியாவை எதிர்பாத்து காப்பாத்துவாங்கன்னு காத்துட்டு இருக்காங்க. //
இந்தியாவை எதிர்பார்த்தல்ல! தமிழகத்தை எதிர்பார்த்த்தே! நீளமாக இதை விளக்க முனைந்தால் அது நமது இறையாண்மையின் மீதான உரசலாக அமையக் கூடும்.

ILA (a) இளா said...

//அப்புறம் இது கவுஜன்னா சரியா டிஸ்கி போட்டு சொல்லுங்க. இந்த பின்னூட்டத்தை வாபஸ் வாங்கிக்கறேன்//
இது கவிதை?????யா??

ILA (a) இளா said...

//என்னை கேட்டா, ஹ‌னுமான் இருந்தா கூட போதும்.//
அதுதாங்க மேட்டரே?ஹனுமன் போனாலும் வாலுக்கு கண்டிப்பா தீ உண்டே.

ILA (a) இளா said...

//என்னை கேட்டா, ஹ‌னுமான் இருந்தா கூட போதும்.//
அதுதாங்க மேட்டரே?ஹனுமன் போனாலும் வாலுக்கு கண்டிப்பா தீ உண்டே.

கோவி.கண்ணன் said...

//"ராமனைத் தேடும் தமிழர்கள்"//

ஆமாங்க, தமிழர்களுக்கு யாருமே உதவக்கூடாதுன்னு சொல்கிற எல்லோருமே 'ராமன்' வந்து காப்பாத்துவான் என்று நினைக்கிறாங்களோ ?
:(

Unknown said...

இளா,

தமிழர்கள் அனைவருமே ஒருவகையில் ராமர்கள் தானே?சாப்பாட்டு ராமர்கள்.

தேவன் மாயம் said...

இனி இங்கே இருந்து
போகும் ராமர்கள்
ராவணனுடன் சேர்ந்து
விருந்துதான்
சாப்பிடுவார்கள்!!!!
தேவா.

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘