Jun 12, 2006

என் காதலும் உன் வெட்கமும்


நான் காதலை சொல்லிவிடப்
போகிறேன் என நீ வெட்கித் தலைகுனிய
அதைப் பார்த்து நானும்
சொல்லாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டேன் .....
இது மாதிரி ஆயிரம்முறை நீ
வெட்கப்படுவதைப் பார்த்துவிட்டேன்,
ஒருநாளாவது வெட்கப்படுவதை நிறுத்தேன்
என் காதலை சொல்லிவிடுகிறேன்!

16 விதை(கள்):

நாகை சிவா said...

அருமையான வார்த்தைகள் இளா,

வெட்கம் காதலில் இருவருக்கும் வருவது தான்.ஆண்களின் வெட்கம் தயக்கத்தில் ஆரம்பிக்கின்றது. பெண்களுக்கு வெட்கம் இவன் தயங்குவதால் ஆரம்பிக்கின்றது.

நன்மனம் said...

வெட்கபடுவதை நிறுத்தாதற்க்கு காரணம்?

காக்க வைத்து ரசிக்கும் சுகத்திற்க்கு ஆசைபடுகிறாள் போலிருக்கு.

Unknown said...

Ila - FLASH backaaa

Super o super :)

கைப்புள்ள said...

இம்புட்டு நல்லா எழுதறீங்களே...நமக்கும் ஒரு டிரெய்னிங் குடுக்கறது? எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்
:)-

அனுசுயா said...

Super Kavithai :)

நவீன் ப்ரகாஷ் said...

//நான் காதலை சொல்லிவிடப்
போகிறேன் என நீ வெட்கித் தலைகுனிய
அந்த வெட்கத்தை பார்த்து நானும்
சொல்லாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டேன் .....//

வெட்டகம் தன்
முகங்களை
மட்டும்தான்
மாற்றுகிறது
தன்
உணர்வினையல்ல!

வெட்டகத்தின்
கவிதைமுகத்தினை
அழகாக
காட்டியுள்ளீர்கள்
இளா !! :))

கோவி.கண்ணன் said...

//நான் காதலை சொல்லிவிடப்
போகிறேன் என நீ வெட்கித் தலைகுனிய //
வெட்கி என்பதற்கு பதில் நாணி என்றிருந்தால் நன்றாக இருக்கும். நாணம் என்பது பெண்களின் குணம் என்று படித்தவர்கள் (?) சொல்லுவார்கள். அச்சம் மடம் நாணம் என்று வரும் என நினைக்கிறேன்.

ILA (a) இளா said...

வருகைக்கும் பின்னூடத்துக்கும் நன்றி கோவி.கண்ணன். உங்கள் அறிவுரை ஏற்றுகொள்ளப்பட்டது. ;)

சேதுக்கரசி said...

வெட்கப்படுறதை நிறுத்தினாத்தான் நீங்க காதலைச் சொல்லுவீங்கன்னா சொன்ன மாதிரி தான்.

ப்ரியன் said...

நல்ல கவிதை இளா!

ஒரு யோசனை : வெட்கம் என்ற வார்த்தையை அதிகமுறை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம்...

வெட்கப்படுகிறாள் என்றால் அவள் சொல்லாமெலேயே ஏற்றுக் கொண்டாள் என அர்த்தம் சட்டுபுட்டுன்னு சொல்லிடுங்க :)

ILA (a) இளா said...

நன்மனம்-->>//காக்க வைத்து ரசிக்கும் சுகத்திற்க்கு ஆசைபடுகிறாள் போலிருக்கு//
அதுதானே பெண்களின் இயற்கையான குணம்.

ILA (a) இளா said...

நன்றி நாகை சிவா.நல்ல கருத்தும் கூட

ILA (a) இளா said...

கைப்புள்ள-->
//இம்புட்டு நல்லா எழுதறீங்களே...நமக்கும் ஒரு டிரெய்னிங் குடுக்கறது//
அதெல்லாம் மழைல நனைபவர்களுக்குதான் பயிற்சி தரமுடியும். மழை வருதான்னு பார்த்துபுட்டு இல்லைன்னாலும், குடை எடுத்துட்டு போறவங்களுக்கு எல்லாம் பயிற்சி கிடையாதுன்னு சங்கத்துல யாரோ சொன்னதா ஞாபகம்.

ILA (a) இளா said...

Naveen-->//வெட்டகத்தின்
கவிதைமுகத்தினை
அழகாக
காட்டியுள்ளீர்கள்
இளா !!//
எல்லாம் ஆண்டவன் அருள், உங்க ஆசிர்வாத்தத்துடன்

ILA (a) இளா said...

வேண்டாம் தேவு, அழுதுருவேன்.
நன்றி-அனுசுயா
கோவி கண்ணன் -- வருகைக்கு நன்றி. கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது

ILA (a) இளா said...

சேதுக்கரசி-->//வெட்கப்படுறதை நிறுத்தினாத்தான் நீங்க காதலைச் சொல்லுவீங்கன்னா சொன்ன மாதிரி தான்//
வெட்கப்படறதை நிறுத்தி காதலை ஏத்துகிட்டுதான் இந்த உலகம் சுத்துதுங்க.

ப்ரியன்-->>//நல்ல கவிதை இளா!
ஒரு யோசனை : வெட்கம் என்ற வார்த்தையை அதிகமுறை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம்...//
வருகைக்கு நன்றி ப்ரியன். பெரியவங்க யோசனையை ஏத்துக்கிட்டேங்க