Jun 28, 2006

வண்ணத்துடன் என் பூச்சி


அவள் மீது
பட்டாம்பூச்சி
சிறகடித்தது
என் இதயம்!


அவள் காதோரமாக
பறந்து சென்ற பட்டாம்பூச்சி
என் காதலை
அவளிடம் சொல்லியிருக்குமோ?

8 விதை(கள்):

Unknown said...

:)பட்டாம்பூச்சி தினங்கள் ஞாபகமா?

நாகை சிவா said...

இளா, நீங்க எங்கள் உள்ளங்களை சிதற அடிக்கிறீங்க.
நல்லா இருக்குங்க

நவீன் ப்ரகாஷ் said...

தலைப்பே ஒரு கவிதையாக இருக்கிறது இளா ! :)

கைப்புள்ள said...

இதுல எது வண்ணம், எது பூச்சின்னு சொல்லுங்கய்யா. எப்படியா இப்பிடியெல்லாம் உங்களால மட்டும் முடியுது? படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதுவீங்களா இல்லை கவிதை எழுதிட்டு படத்தைத் தேடுவீங்களா?

நல்ல கற்பனை.

ILA (a) இளா said...

தேவ்-->365 நாளும் பட்டாம் பூச்சிய் ஞாபகம்தான், அப்புறம் எதுக்கு தனியொரு நாள்.
நாகை சிவா-->//எங்கள் உள்ளங்களை சிதற அடிக்கிறீங்க,நல்லா இருக்குங்க// நன்றிங்க சிவா. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி

ILA (a) இளா said...

நவீன் - நன்றிங்க நவீன், தலைப்பை கவிதையாக்கிற பாணி உங்களை மாதிரி மகான்களிடம் கற்று கொண்டதுதான்

கைப்புள்ளை-->// படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதுவீங்களா இல்லை கவிதை எழுதிட்டு படத்தைத் தேடுவீங்களா//
போர்த்திக்கிட்டும் படுத்துக்கலாம் படுத்துகிட்டும் போர்த்திக்கலாம்

கோவி.கண்ணன் said...

அவள் மீது
பட்டாம்பூச்சி
படபடத்தது
என் இதயம்!


அவள் காதோரமாக
பறந்து சென்ற பட்டாம்பூச்சி
என் காதலியை பற்றி
அவளிடம் போட்டுக் கொடுத்திருக்குமோ?

கிண்டல் தான் :)

thiagu1973 said...

நேரடியா சொன்னாலேஎப்ப சொன்னீங்கன்னு கேட்குறாங்க
பட்டாம் பூச்சி சொன்னதையா கேட்க போறாங்க . விடுங்க சார்

தியாகு