Feb 14, 2007

டேய் காதலா-2


முதன் முறையாக,
ஒரு பகலின் இருட்டில் நாம்.
கையில் பசி தணிக்க பாப்கார்னும்,
சூடு தணிக்க பெஃப்சியும்.
திரையரங்கின் மூலை சீட் நமக்கு
தொந்தரவு செய்ய அருகிலும் யாருமில்லை.
பாப்கார்னை மட்டும்
தின்று விட்டு
எனைத் தின்னாமல்
பத்திரமாய் வீட்டில் விட்டாய்,
நமக்கு முதல் இருட்டே
பகலாய் போனதே!


உன் வீட்டில் யாருமில்லை என்று
அழைத்தாய் என்னை,
சினிமாவை போல்- அன்று
மழை இல்லை, மின்னல் இல்லை,
ஏன் இரவாகக் கூட இல்லை,
இடியும் இடிக்கவில்லை,

நானும் பயந்து வந்து
உன்னை கட்டியணைத்துக் கொள்ளவில்லை.


சே,
சினிமாவில் காட்டுவதெல்லாம்
பொய்யென்று நினைத்தேன்
ஆனாலும் சினிமாவில் காட்டாத
காட்சியெல்லாம் அரங்கேறியது,


சீ, சீ!
சினிமா அப்படியொன்றும் பொய் இல்லை!


உன் முதல் மாத சம்பளம்
ஒரு தோடும், பொட்டும்,
100 ரூபாயும் குடுத்தாய்.
நீ வாங்கிய பைக்கில்
என்னைத்தான் அமர்த்திப்பார்த்தாக
வேண்டும் என்று அடம் உனக்கு.
முக்காடு போட்டபடி உன்னைத் தொடாமல்
ரோட்டி ஊர்ந்தபடி நானும், பைக்கும்.
தோடும், பொட்டும், பணமும்
பத்திரமாய் பையில்,
மனம் மட்டும வானத்தில்!



டிராபிக் சிக்னல்,
இறுக்கி அணைத்த படி
முன் வண்டியில்
இளம் தம்பதி!
வயிறு எரிந்தது எனக்கு.
சீக்கிரமே,
என்னை கல்யாணம் பண்ணுடா,
ஆயிரம் பேரயாவது
வயிறு எரிய வெக்கிறேன்.





நீ சிகரெட் பிடிக்கும் போதெல்லாம்
பிடிங்கி வைத்துக்கொண்ட சிகரெட்டுகள்
பெட்டி வழிய என் அறையில்.
அவற்றை பிடிக்கவாவது என் அறைக்கு
யாருக்கும் தெரியாமல் வந்து போடா!







"காதலர் தினத்துக்கு என்ன தருவாய்?"
என்று கேட்டேன்,
"என்னைத்தரவா?" என்றாய்,
எதற்கு? உன்னைக் கொடுத்து
"என்னை எடுத்துக் கொள்வாய்,
அப்படியே கொல்லவும் செய்வாய்.
"அப்போ உன்னை பார்க்க
வர மாட்டேன் என்றாய்".
"பரிமாற்றம், நாளை மட்டும்" என்றேன்,
ஆயிரமாவது தடவையாக.

16 விதை(கள்):

நவீன் ப்ரகாஷ் said...

//ஆனாலும் சினிமாவில்காட்டாத காட்சியெல்லாம் அரங்கேறியது,
சீ, சீ!
சினிமா அப்படியொன்றும் பொய் இல்லை!//

:)))

//அவற்றை பிடிக்கவாவது என் அறைக்கு
யாருக்கும் தெரியாமல் வந்து போடா!//

:))

இளா காதலர் தினத்தில் அழகான கவிதைச்சரம் !! மிக ரசித்தேன் :))))

கருப்பு said...

அருமையான கவிதை இளா.

எனக்கே காதலிக்கும் ஆசை வந்து விட்டது!

Unknown said...

இளா,

கவிதைகளை எழுதினீர்களா? தூவினீர்களா? காதல் மணம் வீசுகிறது...

காதல் நாள் வாழ்த்துக்கள்!!!

Unknown said...

மாப்பூ.. அருமையானக் கவிதை கலக்கிட்டீங்க..

ப்ரியன் said...

மனமெங்கும் காதல் சாரல் அருமை இளா...

ஜி said...

விவசாயி வரப்பு மட்டும்தான் வெட்டுவார்னு நெனச்சேன்....

இங்க தூரு வாரி தூவானமே போட்டுட்டீரும்...

காதலர் தின வாழ்த்துக்கள்.... :)))

ILA (a) இளா said...

//இளா காதலர் தினத்தில் அழகான கவிதைச்சரம் !! மிக ரசித்தேன் //
வாங்க நவீன், நன்றி.

//எனக்கே காதலிக்கும் ஆசை வந்து விட்டது! //
ஆஹா கருப்பு.. உங்கக்கிட்டு இருந்து பின்னூட்டமா? அதுவும் காதலைப்பத்தி..

ILA (a) இளா said...

//விவசாயி வரப்பு மட்டும்தான் வெட்டுவார்னு நெனச்சேன்....//
நன்றிங்க ஜி.

//கவிதைகளை எழுதினீர்களா? தூவினீர்களா? காதல் மணம் வீசுகிறது...//
அருட்பெருங்கோ--> உமக்கு முன்னாடி நாமெல்லாம் தூசிய்யா.

நந்தா said...

//தோடும், பொட்டும், பணமும்
பத்திரமாய் பையில்,
மனம் மட்டும வானத்தில்! //

எவ்வளவு அருமையான வரிகள்.

//சீக்கிரமே,
என்னை கல்யாணம் பண்ணுடா,
ஆயிரம் பேரயாவது
வயிறு எரிய வெக்கிறேன்.//

//அவற்றை பிடிக்கவாவது என் அறைக்கு
யாருக்கும் தெரியாமல் வந்து போடா!//

இப்படி ஒரு காதலி கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்.ஒரு பெண்ணோட பார்வைல இருந்து காதலை சொன்னீங்க பாருங்க. கலக்கீட்டீங்க.

சீனு said...

arumaiyena kavithaigal...rasithean...

ILA (a) இளா said...

//இப்படி ஒரு காதலி கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்.ஒரு பெண்ணோட பார்வைல இருந்து காதலை சொன்னீங்க பாருங்க. கலக்கீட்டீங்க. //
வாங்க நந்தா. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க. பெண்களின் பார்வையில எழுதறது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லீங்க. கடைவீதி பக்கம் போனா அவுங்க ஆசைகள் தடையில்லாம வெளிய வரும், அதுல ஒரு 10 பெண்களோட ஆசை இதுவாத்தான் இருக்கும்னு நெனைச்சு எழுதினதுதான் இந்தக்கவிதைத் தொடர். அடுத்த பகுதி விரைவில்.

Anonymous said...

:-) :-)
என் கவிதை படிப்பவர்களுக்கு எப்படி இருக்கோ.. ஆனாலு் உங்கள் கவிதை படிப்பவர்கள் முகத்தில்.. சிரிப்பும்.. வெட்கமும்.. கூடவே.. வருகிறது..

:-) :-)
நேசமுடன்..
-நித்தியா

யாழ்_அகத்தியன் said...

அருமையான கவிதை இளா.

சேதுக்கரசி said...

அன்புடன் கவிதைப் போட்டியில் இயல்கவிதைப் பிரிவின் நடுவர் "திசைகள்" ஆசிரியர் எழுத்தாளர் மாலனின் ஊக்கப் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!

manipayal said...

திரு இளா,
அருமையான எண்ணங்கள்
அதற்கேற்ற வண்ணங்கள்(வார்த்தைகள்)
ஆனால் அவ்வபொழுது வராமல்
அடிக்கடி வாருங்கள்

அட உங்கள் கவிதைகளை படித்ததும் எனக்கும் கவிதை எழுத முடிகிறதே

அன்புடன்
சௌதி சாம்பு

manipayal said...

அழகான எண்ணங்கள்
அதற்கேற்ற வண்ணங்கள்(வார்த்தைகள்)
ஆனால் அவ்வபொழுது எழுதாமல்
அடிக்கடி எழுதுங்கள்

சௌதி சாம்பு